
பொங்கல் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரியது செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன். காலத்திற்குள் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிக்கும் கதை. கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவுக்கே பெருமைக்குரிய படைப்பாக இது இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
தனுஷின் ரீமேக் படமான குட்டியும் களத்தில் உள்ளது. தெலுங்கில் வெற்றி பெற்ற ஆரியா படத்தின் ரீமேக்தான் குட்டி. ஸ்ரேயா நாயகி. மித்ரன் ஆர் ஜவஹர் படத்தை இயக்கியிருக்கிறார்.
சிபி வில்லனாக நடித்திருக்கும் நாணயமும் போட்டியில் கலந்து கொள்கிறது. பிரசன்னா ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. எஸ்.பி.பி.சரண் தயாரித்திருக்கிறார்.
எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு படம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். 38 வருடங்களுக்கு பிறகு வரும் கௌபாய் படம். சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். கௌபாய் உலகை காட்சிப்படுத்தும் மெகா அரங்குகள் சுவாரஸியமானவை. லாரன்ஸ், பத்மப்ரியா, சந்தியா, லட்சுமிராய், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், மனோரமா, இளவரசு என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
வசந்தபாலனின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அங்காடித் தெருவும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. ஐங்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படம் தி.நகர் பகுதியிலுள்ள கடையில் சேல்ஸ் பிரிவில் வேலை செய்யும் இருவரைப் பற்றியது. மகேஷ், அஞ்சலி நடித்துள்ளனர்.
இந்த ஐந்து படங்களும் பொங்கலுக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஐந்தும் வெற்றி பெற வேண்டும் என்பதே சினிமா ஆர்வலர்களின் விருப்பம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.