மணிரத்னத்தின் ராவண் மே மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி, தமிழ் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு இன்னும் தமிழ்ப் பெயர் முடிவு செய்யப்படவில்லை என்பது முக்கியமானது.
இந்திப் பதிப்பில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்துள்ளனர். வில்லனாக நடித்திருப்பவர் விக்ரம். தமிழில் ஹீரோயின் ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் நடித்த வேடத்தில் விக்ரம். இந்தியில் விக்ரம் நடித்த வில்லன் வேடம் பிருத்விராஜுக்கு. தமிழ் பதிப்பில் ப்ரியாமணி, கார்த்திக் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். மே மாதம் 25 ஆம் தேதி அனேகமாக படம் திரைக்கு வரலாம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
2010 இந்தி, தமிழ் இரு மொழிகளில் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய மெகா பட்ஜெட் படங்களில் ராவண் படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.