Sunday, January 3, 2010

> மர்மயோகி சன் பிக்சர்ஸில்?

மிஷ்கினுக்கு கமல் கல்தா கொடுத்துவிட்டதாக பரவலாக பேச்சு. என்ன நடந்தது அவர்களுக்குள்?

நந்தலாலாவுக்குப் பிறகு சேரன் நடிக்கும் யுத்தம் செய் படத்தை இயக்குவதாக இருந்தார் மிஷ்கின். சேரனும் சின்சியராக இந்தப் படத்துக்காக தாடி மீசை எல்லாம் வளர்த்தார்.

இந்நிலையில் மிஷ்கினின் நந்தலாலா படத்தைப் பார்த்த கமல், இணைந்து பணிபு‌ரியலாம் என்று சொல்ல, சேரனை கழற்றிவிட்டு கமலுக்கு கதை பண்ணத் தயாரானார் மிஷ்கின். புத்தர் காலத்து ச‌ரித்திர கதை என்பதுவரை முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மிஷ்கின் ஸ்கி‌ரிப்ட் தயார் செய்ய காலம் பிடிக்கும், அந்த இடைவெளியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் கமல் நடிப்பதாக செய்தி வெளியானது. படத்தை உதயநிதி ஸ்டாலின் தயா‌ரிப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதுவரை எல்லாம் ச‌ரியாகதான் போய்க் கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தை சுழற்றியடிக்கும் சில வதந்திகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்துக்குப் பிறகு மீண்டும் மர்மயோகியை தூசு தட்ட இருக்கிறாராம் கமல். பைனான்ஸ் பிரச்சனையால் நின்றுபோன படத்துக்கு பணம் பம்ப் பண்ண முன் வந்திருக்கிறதாம் சன் பிக்சர்ஸ். எந்திரன் படத்துக்குப் பிறகு இந்த புராஜெக்ட் டேக்ஆஃப் ஆகும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

அதேநேரம், கே.எஸ்.ரவிக்குமார் படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கும் படத்துக்கு கமல் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மையாக இருந்தாலும் மிஷ்கினுக்கு கமல் டாட்டா காட்டியது நிஜமாகிவிடும் என்கிறார்கள். மிஷ்கின் தரப்பு இதுபற்றி எதுவும் கூறாதது சந்தேகத்தை வலுப்படுத்தியிருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.