மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அசலில் நடிகர் திலகம் சிவாஜி

அஜித் நடித்து சரண் இயக்கும் அசல் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு பாடலை அர்ப்பணம் செய்திருக்கிறார்கள். அப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் நடிகர் திலகத்தை நினைவுபடுத்துவதாக இருக்குமென்கிறார் சரண்.

அஜித் ஆசைபட்டபடி இந்தப் பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். படத்தில் அஜித் தன் தந்தையை நினைத்து பாடுவது போன்ற காட்சி அது. அதில் வரும் வரிகள் தந்தைக்கு மகன் ஆற்றும் கடமைகள் பற்றிய கருத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இப்படித்தான் பாடல் வேண்டும் என்று வைரமுத்துவிடம் கேட்டதும் மிகவும் உற்சாகத்துடன் ஒரே நாளில் எழுதிக் கொடுத்து பதிவும் செய்யப்பட்டது.

இந்த விஷயம் கேள்விப்பட்ட நடிகர் திலகம் குடும்பத்தார் மிகவும் நெகிழ்ந்து போயினர். சொந்தப் படம்தான் என்றாலும், இப்படியொரு பாடலை வைக்க வேண்டும் என தோன்றிய எண்ணத்துக்குத்தான் இந்தப் பாராட்டு.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.