மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்ணைத்தாண்டிய வரவேற்பு

நேற்று விண்ணைத்தாண்டி வருவாயா வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் என்பதாலும், சிம்பு, த்‌ரிஷா நடித்திருக்கும் காதல் படம் என்பதாலும் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு.

சென்னையிலும் புறநக‌ரிலும் உள்ள மல்டி பிளிக்ஸ்களில் கூட்டம் அலைமோதியது. சமீபத்தில் எந்தப் படத்துக்கும் இப்படியொரு கூட்டம் இல்லை என்பதே மல்டி பிளிக்ஸ் உ‌ரிமையாளர்களின் வியப்பு.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கார்த்திக் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டராக சிம்பு நடித்துள்ளார். ஜெஸ்ஸி என்ற சாஃப்ட்வேர் இன்‌ஜினியராக த்‌ரிஷா.

இது கௌதமின் நிஜ வாழ்க்கை காதலை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. கார்த்தியைப் போலவே மெக்கானிக்கல் இன்‌ஜினிய‌ரிங் படித்து திரைப்படத் துறைக்கு வந்தவர் கௌதம்.

படத்தின் இசையும் மனோ‌ஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் முக்கிய அம்சங்கள். கௌதம் பாடல்களை படமாக்கியிருக்கும் விதமும் அலாதியானது. காதலை ரசிப்பவர்களுக்கு விண்ணை‌த்தாண்டி வருவாயா ச‌ரியான சாய்ஸாக இருக்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.