மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நோ கமெண்ட்ஸ் - அ‌ஜீ‌த்

நேற்று மாலை நடிகர் அ‌ஜீ‌த் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தி‌ற்கு‌ச் சென்று சந்தித்தார்.

சமீபத்தில் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அ‌ஜீ‌த், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வரும்படி மிரட்டுகிறார்கள் என்று பகிரங்கமாக குற்றம்சாற்றியிருந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அ‌ஜீ‌த் முதல்வரை சந்தித்ததால் ஏராளமான பத்தி‌ரிகையாளர்கள் அ‌ஜீ‌த்தை பேட்டி காண முதல்வ‌ரின் வீட்டு முன்பு திரண்டனர்.

சுமார் இருபது நிமிடங்கள் முதல்வருடன் உரையாடிவிட்டு வெளியே வந்தார் அ‌ஜீ‌த். அவரை சூழ்ந்து கொண்டு பத்தி‌ரிகையாளர்கள் கேள்விகள் தொடுத்தனர். எதற்கு இந்த சந்திப்பு என்ற கேள்விக்குப் பதிலளித்த அ‌ஜீ‌த், இது ம‌ரியாதை நிமித்தமான சந்திப்பு அவ்வளவுதான் என்றார்.

அ‌ஜீ‌த் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய போது அவருக்கு ஆதரவாக ர‌ஜினி எழுந்து நின்று கைத்தட்டினார். இதுபற்றி நிருபர்கள் அ‌ஜீ‌த்திடம் கேட்டதற்கு, அவருக்கு என் நன்றி என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

நிருபர்கள் ஆர்வமாக இருந்தும் பேச்சை முடித்து கிளம்புவதிலேயே குறியாக இருந்தார் அ‌ஜீ‌த். நீங்கள் சொன்ன கருத்தில் இப்போதும் உறுதியாக இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, நோ கமெண்ட்ஸ் என்று ஒரே வார்த்தையில் பதிலளித்து கா‌ரில் பறந்தார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.