மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இந்திக்கு செல்லும் ‌G.V.பிரகாஷ்

இந்திப் படவுலகில் தமிழர்களின் ஆக்கிரமிப்பு சற்று தீவிரமாகவே உள்ளது. ஒளிப்பதிவாளர்களைத் தொடர்ந்து நடிகைகளும் பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானும், மணிரத்னமும் பாலிவுட்டை சேர்ந்தவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

விரைவில் ‌ஜி.வி.பிரகாஷ்குமாரும் இந்திக்கு செல்கிறார். நடன இயக்குனரும் மேன் ஹு நா, ஓம் சாந்தி ஓம் படங்களின் இயக்குனருமான பராகானின் கணவர் ஷி‌ரிஷ் குந்தர் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். இவர் மேலே சொன்ன இரண்டு படங்களிலும் எடிட்டராக பணிபு‌ரிந்தவர்.

ஷி‌ரிஷின் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ஜான் ஆபிரஹாம். இந்தப் படத்துக்கு இசையமைக்க ‌ஜி.வி.பிரகாஷிடம் பேசியுள்ளனர். விரைவில் ‌ஜி.வி.பிரகாஷிடமிருந்து இந்திக்கு செல்லும் அதிகார‌ப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.