மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மோகன்லால் படத்தில் தேவயானி

பல வருடங்களுக்குப் பிறகு சீனிவாசனின் கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கிறார் மோகன்லால். படம் ஒரு நாள் வரும். லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு நாள் வரும் என்பதுதான் படத்தின் மையக்கரு.

நடிகர் மணியன் பிள்ளை ராஜு இந்தப் படத்தை தயா‌ரிக்கிறார். இயக்குவது ரா‌ஜிவ்குமார். சீனிவாசனும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தேவயானி ஒப்பந்தமாகியுள்ளார். கடைசியாக இவர் மோகன்லாலுடன் நடித்த படம் லாலேட்டன். இதில் மோகன்லாலின் மனைவியாக தேவயானி நடித்திருந்தார். திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு தேவயானி ஹீரோயினாக நடித்த படம் லாலேட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு நாள் வரும் படத்தின் மூலம் மலையாளப் படவுலகுக்கு திரும்பி வந்திருக்கிறார் தேவயானி. வரவு நல்வரவாகட்டும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.