சிம்புதேவனின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மீண்டும் தள்ளிப் போகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மாற்றம் என்கிறார் சிம்புதேவன்.
28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் தயாராகியிருக்கும் கௌபாய் படம் என்ற அறிமுகத்துடன் அட்டகாசமாக பொங்கல் ரேசுக்கு தயாரானது இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.
ஆனால் பொங்கலுக்கு படம் வெளியாகவில்லை. சில பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸை மார்ச் மாதத்துக்கு தள்ளிவைத்தனர். மார்ச் 26 படம் திரைக்கு வருவதாக விளம்பரங்கள் செய்த நிலையில் மீண்டும் ரிலீஸ் தேதியில் மாற்றம்.
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என தற்போது அறிவித்துள்ளார் சிம்புதேவன். இந்த மாதம் அதிக படங்கள் திரைக்கு வருவதால்தான் இந்த மாற்றம் எனவும் கூறப்படுகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.