மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> க‌ச்சே‌ரி ஆர‌ம்ப‌ம் - விமர்சனம்

மற்றவர்கள் நம்மை கிண்டல் செய்யும் முன் நம்மை நாமே கலாய்ப்பது தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட். இந்த புதிய மொந்தையில் தயாராகியிருக்கும் பழைய கள், கச்சே‌ரி ஆரம்பம்.

ஊரை விட்டு ஓடிவரும் ஹீரோ. நாயகியை கண்டதும் காதலில் விழும் இன்ஸ்டன்ட் லவ். விறைப்பா அறிமுகமாகி சொதப்பலாக முடிவுறும் வில்லன் எபிசோட்... எப்படிப் பார்த்தாலும் பழமையின் தூசு படிந்த கதைதான் கச்சே‌ரி ஆரம்பம். அறிமுக இயக்குனர் திரைவண்ணன் இந்த பழைய கள்ளில் சேர்த்திருக்கும் சி‌ரிப்பு மாத்திரை மட்டும் பேஷ், ரொம்பப் பிரமாதம்.

‌ஜீவாவுக்கு படத்தில் பெயர் பா‌ரி. பெயருக்கேற்ப இல்லாதவர்களுக்கு அப்பா காசை அள்ளிவிடுகிறார். அதுவே ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் லட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு துரத்துகிறது. இயக்குனரும், எடிட்டரும் நேரத்தை சேமிப்பதில் கெட்டி. சென்னை வந்த முதல் நாளே ஹீரோயினுடன் சந்திப்பு, ஹீரோவுக்கு புது வேலை என றெக்கை கட்டுகிறார்கள்.

நக்கலான டயலாக் நயாகரா மாதி‌ரி கொட்டும் டேக் இட் ஈஸி கேரக்டர் ‌ஜீவாவுக்கு. ஓடுகிற ரயிலில் தாவி ஏறி, இந்தப் படத்துல நான்தான் ஹீரோ, அதுதான் இந்த பில்டப் என்று அறிமுக காட்சியிலேயே பட்டாசை பற்ற வைக்கிறார். இடைவேளை வரை அணையவில்லை இந்த இடக்கு மடக்கு.

பூனம் உதவி கேட்பது ரவுடிகளுக்கெல்லாம் ரவுடியான ஜே.டி.சக்ரவர்த்தியிடம். பூனம் ப‌ஜ்வாவை அவரது வீட்டில் ட்ராப் செய்யும் கால் மணி நேரத்தில் அவர் மீது காதலாகிவிடுகிறார் சக்ரவர்த்தி. அதன் பிறகு அவர் செய்வதெல்லாம் கில்லி செல்லத்தின் திருவிளையாடல்கள். பூனம் ப‌ஜ்வாவிடம் ஐ லவ் யூ சொல்பவனின் நாக்கை அறுக்கிறார், அவரது ஸ்கூட்டியில் உட்கார்ந்தவனின் ‘சீட்’டில் இஸ்தி‌ரியால் சூடு வைக்கிறார்.

வில்லனுக்கு எதிராக ஹீரோ தொடைதட்டி சவால்விடாமல் வில்லனின் கூட இருந்தே குழி பறிக்கும் இடத்தில் மாத்தி யோசித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் படம் நொண்டியடிப்பதும் இதன் பிறகுதான். அடுத்தவனை போட்டுத் தள்ளவும் பயப்படாத சக்ரவர்த்தி ‌ஜீவாவிடம் புட்டிப் பால் குழந்தையாக குழைவதும், அவர் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்வதும் லா‌ஜிக் இல்லா மே‌ஜிக்குகள். இந்த குழப்பத்துக்கு நடுவில் ‌ஜீவா, பூனம் ப‌ஜ்வா காதலும் கலங்கிப் போவதை சொல்லியாக வேண்டும்.

முக்கால் பேண்டும் முகம் நிறைய விறைப்புமாக வரும் வடிவேலு கலகலக்க வைக்கிறார். ஆரம்பத்தில் பாஸாக இருக்கும் அவரை ‌ஜீவா பீஸ் உருவும் ஒவ்வொரு காட்சியும் காமெடி பஜார். ஆனாலும் அந்த ஆய் சீன் ரொம்ப ச்சீய்..

படத்தின் மிகப் பெ‌ரிய பிளஸ் ‌ஜீவாவின் அலட்சியமான நடிப்பும், திரைவண்ணனின் சீ‌ரியஸில்லா காட்சிகளும், சி‌ரிப்பு வசனங்களும். பூனம் ப‌ஜ்வா தனது நெருக்கடியை கண்ணீர் மல்க ‌ஜீவாவிடம் கூற, அவரோ பொங்கியெழாமல், டிபிக்கல் டிபிக்கல் டெம்பிள் கோயிங் என்று தமிழ் பழமொழியை ஆங்கிலத்தில் அடிக்கிறாரே... திரையரங்கில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஆய் ஊய் என்று கத்தாத ஜே.டி.சக்ரவர்த்தியின் வில்லத்தனத்துக்கு பாஸ் மார்க் போடலாம்.

கிளைமாக்சில் வில்லனின் நெஞ்சில் ஏறி மிதித்து பன்ச் டயலாக் பேசாமல் வித்தியாசமாக முடித்திருப்பதும் நன்றாகவே உள்ளது.

சராச‌ரியான பாடல்கள், சராச‌ரிக்கும் கீழான பின்னணி இசை. புதிதாக எதுவும் சொல்ல முடியாத ஒளிப்பதிவு. சொல்ல வந்த கதைக்கு தொந்தரவு செய்யாமல் இருந்ததே தொழில்நுட்ப சைடின் ஒரே ஆறுதல்.

காமெடி தூக்கலான கமர்ஷியல் கச்சே‌ரி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.