
இது குறித்து அறிவழகன் உறையூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் திருச்சி பாலக்கரை குட்செட் அருகே அதே கும்பல் பயங்கர ஆயுதங்களை காட்டி முதலியார் சத்திரத்தை சேர்ந்த ரவியின் டிபன் கடையில் கொள்ளையடித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பாலக்கரை அருகே ஒரு கும்பல் காரில் சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவ இடம் சென்று, காரில் சென்ற கும்பலை மடக்கி பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தபோது, இந்த கும்பல் கொடைக்கானலை சேர்ந்த ஒரு தொழில் அதிபரை கொல்ல சதி திட்டம் தீட்டிய திடுக்கிடும் தகவல் வெளியானது.
இந்த கும்பலை போலீசார் பிடித்ததின் மூலம் கொடைக்கானலில் நடக்க இருந்த தொழில் அதிபர் கொலை தடுக்கப்பட்டது. கைதானவர்களில் சிலர் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ரவுடி குணாவின் பழைய கூட்டாளிகள் ஆவார்கள்.
இதில் சிக்கிய மற்றொரு வாலிபர் மணிவேல் பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் காக்க காக்க, மனசெல்லாம் உள்பட சில திரைப்படங்களில் உதவி டைரக்டராக பணி புரிந்து உள்ளார். தற்போது புதிதாக ஒரு படத்தை இயக்கி கொண்டும் இருக்கிறார். அதேபோல் கூலிப்படையை சேர்ந்த மதன்குமார் ஐ.டி. டிப்ளமோ படித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.