மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரேயா - த்‌ரிஷாவுக்குப் பதில்

ரவி தேஜா, நயன்தாரா நடித்த துபாய் சீனு ஆந்திராவில் பெ‌ரிய வெற்றியைப் பெற்றது. நயன்தாரா நடித்திருந்ததால் இந்தப் படத்தை துபாய் ராணி என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டனர். படம் ரொம்ப சுமாராகவே போனது.

தெலுங்கில் ரவி தேஜா டான் சீனு என்ற படத்தில் நடிக்கிறார். துபாய் சீனுவுக்கு கிடைத்த வெற்றியை மனதில் வைத்து டான் சீனுவை உருவாக்குகிறார்கள்.

இந்தப் படத்தில் நடிக்க முதலில் த்‌ரிஷாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. அவர் இந்தி, தமிழ் என்று பிஸியாக இருப்பதால் கால்ஷீட் இல்லையென கைவி‌ரிக்க ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

தெலுங்கில் பல வருடங்களாக ஸ்ரேயா நடிக்கவில்லை. இப்போதுதான் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த ராசியா தெ‌ரியவில்லை ரவி தேஜாவின் ஜோடியாகியிருக்கிறார். தமிழிலும் டான் சீனுவை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.