திரைப்படங்களை வாங்குவதில் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன. அவையும் பெரிய திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் சிறிய படங்களின் நிலை கவலைக்குரியதாகவே இருந்து வருகிறது.
முன்பு ஸீ தொலைக்காட்சி சிறிய படங்களை வாங்கி வந்தது. தற்போது அதுவும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் கேப்டன் டிவி-யின் அறிவிப்பு சிறிய படங்களின் தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 14 முதல் கேப்டன் டிவி தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. செய்தி, சினிமா இரண்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தெரிவித்திருந்தார் எல்.கே.சுதீஷ். புதிய திரைப்படங்களை வாங்குவதற்கென்றே பெரிய தொகை ஒன்றை ஒதுக்கியிருக்கிறார்களாம்.
பெரிய படங்களை வாங்குவதில் சன், கலைஞர் போட்டி போடுவதால் கேப்டன் டிவி ஒதுக்கியிருக்கும் தொகை சின்னப் படங்களுக்கே சித்திக்கும் என்பது தயாரிப்பாளர்களின் நம்பிக்கை. கேப்டனால் இப்படியொரு நன்மை திரையுலகுக்கு கிடைத்தால் அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.