அழகான பொண்ணுதான் படத்தின் இயக்குனர் திரு, நமிதா மீது அடுக்கடுக்காக குற்றம் சாற்றியிருக்கிறார். தனது படத்துக்கு நமிதா ஒத்துழைப்பு தரவில்லை, பல காட்சிகளில் ஈடுபாடே இல்லாமல் நடித்தார், ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க வேண்டிய காட்சிகளை வேண்டுமென்றே தவிர்த்தார்... திருவின் குற்றச்சாற்று நீள்கிறது.
இந்த குற்றச்சாற்றுகள் அனைத்தையும் நமிதா மறுத்துள்ளார். தான் கொடுத்த கால்ஷீட்களை இயக்குனர் திரு வீணடித்துவிட்டார், அவருக்கு படமே எடுக்கத் தெரியவில்லை என்பது நமிதாவின் பதில்.
இதில் யார் சொல்வது உண்மை?
திருவுக்கு படம் இயக்கத் தெரியவில்லை என்று நமிதா கூறியிருப்பது உண்மை என்பதை படம் பார்க்கும் யாரும் ஒப்புக் கொள்வார்கள்.
அழகான பொண்ணுதான் படத்தை முதலில் இயக்க ஒப்பந்தமானவர் பெரிசு படத்தை இயக்கிய காமராஜ். இவருக்காகதான் அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தார் நமிதா. படப்பிடிப்பு தொடங்கிய போது காமராஜை மாற்றிவிட்டு திருவை ஒப்பந்தம் செய்தனர். திருவின் இயக்கத்தில் நடிக்க முடியாது என்றார் நமிதா. பிறகு தயாரிப்பாளர்கள் சங்கம் பஞ்சாயத்து செய்து நமிதாவை நடிக்க வைத்தனர்.
ஹீரோவாக பெரிய நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதாகச் சொன்னதும் திருவின் வருகையால் மாறியது. திரு தனது அக்கா மகனை ஹீரோவாக்கினார். இந்தக் குழப்படிகளால் விருப்பமே இல்லாமல் படத்தில் நடித்தார் நமிதா.
படத்தின் ஒட்டுமொத்த குழப்பத்துக்கும் காரணமான திரு சொந்தமாக ஒரு கதையை யோசித்திருந்தாலும் பரவாயில்லை. இத்தாலி படமான மெலினாவை அப்படியே காப்பியடித்திருக்கிறார். உலகின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றான மெலினாவை திரு அளவுக்கு வேறு யாரும் இந்தளவு கேவலப்படுத்தியிருக்க முடியாது.
திருட்டு வி.சி.டி.க்கு எதிராகப் பேசுகிறவர்கள் திருவுக்கு என்ன தண்டனை தரப் போகிறார்கள்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.