தெலுங்கில் ஒரு ஹீரோ நடிக்க ஒப்புக் கொண்டால் அட்வான்ஸாக சில ஆயிரங்கள் கொடுத்தால் போதும். சம்பளத்தில் பாதியை உடனே தர வேண்டும் என்றெல்லாம் அடம் பிடிப்பதில்லை. படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் போது சம்பளத்தை செட்டில் செய்தால் போதும்.
ஆனால் இங்கு?
ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே முக்கால்வாசி சம்பளத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் தந்துவிட வேண்டும். சிலர் மொத்த சம்பளத்தை வைத்தால்தான் ஆயிற்று என்று அடம்பிடிப்பதும் உண்டு.
இதன் காரணமாக படப்பிடிப்புக்கு முன்பே படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதி, சம்பளம் என்ற பெயரில் தயாரிப்பாளரின் கைவிட்டு போய்விடும். இதனால் கடன் வாங்கி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை கவலைக்குள்ளாகிவிடும். படப்பிடிப்பு முடியும் வரை ஹீரோவுக்கு கொடுத்தப் பணத்துக்கு வட்டி கட்ட வேண்டுமே. இந்த நிலை தெலுங்கில் அனேகமாக இல்லை.
தெலுங்கில் உள்ள அந்த நல்ல பழக்கத்தை இங்கேயும் புழக்கத்தில்விட்டுள்ளார் நடிகர் வினய். இவர் நடித்த எந்தப் படமும் சரியாகப் போகவில்லையென்றாலும் இயக்குனர்கள் இவரை தேடி வரவே செய்கிறார்கள். விரைவில் செல்வா இயக்கத்தில் இவர் நடித்த நூற்றுக்கு நூறு வெளிவரவுள்ளது.
இனி தன்னை ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அட்வான்ஸாக அதிகம் தர வேண்டியதில்லை, அச்சாரமாக ஒரு ரூபாய் தந்தாலும் போதும் என அறிவித்துள்ளார் வினய். சம்பளமும் இவ்வளவு என்று இல்லை, படம் விற்பதைப் பொறுத்து கொடுத்தால் போதும்.
இந்த ஓபன் மார்க்கெட்டுக்குப் பிறகேனும் வினய்க்கு வாய்ப்புகள் வருமா?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.