மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> புதிய சிவப்பு ரோஜாக்கள்

இயக்கனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்குமார், தாஜ்மகால் படத்தில் ஹீரோவாகவும், சில படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். நடிப்பில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற முடியவில்லை என்பதால் முறைப்படி டைரக்சன் தொழிலைக் கற்றார்.

தற்போது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். டெக்னீஷியன்ஸ் தேர்வு நடைபெற்று வருகிறது.

முதல் பட டைட்டிலே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் தந்தையின் ஆலோசனைப்படி சிவப்பு ரோஜாக்கள் என்றே பெயரிட்டிருக்கிறார். படத்தின் டைட்டில் மட்டும்தான் பழையதே தவிர, கதை புத்தம் புதிய வித்தியாசமானது என்கிறார் மனோஜ்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.