மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அசினுக்கு கரும்பு தின்ன கூலி

பிராண்ட் அம்பாசிடர்... கொஞ்சம் பிரபலமடாக இருந்தால் போதும், உங்களையும் இந்தப் பதவி தேடி வரும்.

நடிகை அசின் குளிர்பானம் நிறுவனம் ஒன்றுக்கு பிராண்ட் அம்பாசிடராக இருந்துள்ளார். இன்னொரு பிராண்ட் அம்பாசிடர் பதவியும் அவரை தேடி வரவுள்ளது.

நவீன தோட்டமான ஐ.பி.எல்.லில் புதிதாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டில் ஒன்று கொச்சின். கொச்சின் அணியை பிரபலப்படுத்த அசினை பிராண்ட் அம்பாசிடராக நியமிக்க கொச்சின் அணியின் உ‌ரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அசினுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

பிராண்ட் அம்பாசிடர் என்பது கரும்பு தின்ன கூலி கொடுப்பதைப் போன்ற ஒரு பதவி. பணத்துக்கு பணம், புகழுக்கு புகழ். வேண்டாம் என்றா‌ர் சொல்லப் போகிறா‌ர் அசின்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.