மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> வில்லனுக்கு நோ - ஆர்யா

ஆர்யா தமிழில் காத்திருந்து கால்ஷீட் வாங்க வேண்டிய பிஸி ஹீரோ. அவர் குணசே‌க‌ரி‌ன் தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக் கொண்டது மகா ஆச்ச‌ர்யம். காரணம் வருடு என்ற அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு அர்ஜுனுக்கு தமிழில் ஆர்யாவுக்கு இருக்கும் மார்க்கெட்கூட தெலுங்கில் இல்லை.

எப்படியோ... ஆர்யா வில்லனாக நடித்த வருடு திரைக்கு வந்துவிட்டது. ஹீரோவைவிட வில்லனாக நடித்த ஆர்யாவுக்குதான் அத்தனை புகழும். இங்கேயே தங்கிவிடுங்கள் என்று பணப்பெட்டியுடன் ஆர்யாவை அமுக்கப் பார்க்கிறார்கள் தெலுங்கு தயா‌ரிப்பாளர்கள். சில வில்லன் ஆஃபர்களும் அவருக்கு வந்துள்ளன.

ஆனால் இப்போதைக்கு வில்லனாக நடிப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறார் ஆர்யா. அவரை ஹீரோவாக வைத்து படம் எடுப்பவர்களின் அட்வைசும் இதற்கு காரணம் என்கிறார்கள்.

ஆர்யா தற்போது பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசப்பட்டினம், சிக்குபுக்கு, அவன் இவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.