ஏப்ரல் மாதத்தை அட்டகாசமாக ஆரம்பித்து வைக்க உள்ளது லிங்குசாமியின் பையா. படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருப்பதாலும், லிங்குசாமி, கார்த்தி காம்பினேஷன் என்பதாலும் படத்தின் ஓபனிங் அமோகமாக இருக்கும் என கணித்திருக்கிறார்கள் விமர்சகர்கள்.
பையாவின் தெலுங்குப் பதிப்பு ஆவாரா என்ற பெயரில் இரு வாரங்கள் கழித்து வெளியாகிறது. பையா வெளியாகும் அன்று திரைக்கு வர வேண்டிய ஆவாரா சில காரணங்களால் தள்ளிப் போயுள்ளது.
பையா தமிழகத்தில் வெளியாகும் அதே நாள் அமெரிக்காவிலும் வெளியாகிறது. மொத்தம் 18 நகரங்களில் பையா திரையிடப்படுகிறது. முன் பதிவு டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுவது படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியிருப்பவர்களை மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.