ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ரெட்டச்சுழி. படத்தின் பிரதான விஷயம் அனைவரும் அறிந்தது. இயக்குனர் சிகரமும், இமயமும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். படத்தில் இவர்கள் இருவருமே பிரதான கதாபாத்திரங்கள்.
பாரதிராஜா சிவப்பு சிந்தனையாளராகவும், பாலசந்தர் காங்கிரஸ் அனுதாபியுமாக நடித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சதா குழந்தைகள் போல் சண்டையிட்டுக் கொள்ளும் இந்தப் பெரிய மனிதர்களின் குழந்தைத்தனமான செயல்களை மையப்படுத்தியே கதை பின்னப்பட்டுள்ளது. இவர்களுடன் 22 குழந்தைகளும் நடித்துள்ளனர்.
இளம் ஜோடிகளாக கூத்துப்பட்டறை ஆரி, கற்றது தமிழ் ஸாரி, அங்காடித்தெரு அஞ்சலி நடித்துள்ளனர். இவர்களுடன் சீனிவாசன், மனோபாலா, இளவரசு, கருணாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். நெல்லையை சுற்றியுள்ள கிராமங்களில் மொத்தப் படத்தையும் முடித்துள்ளார் இயக்குனர் தாமிரா. இவர் பாலசந்தரின் அசிஸ்டெண்ட். அவர் இயக்கிய பொய் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார்.
படத்தில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வருகின்றன. இதற்காக ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி நிஜ ராணுவ கேம்ப்களை பார்வையிட்டு அதேபோல் உருவாக்கியுள்ளார் கலை இயக்குனர் ஆரோக்கியராஜ்.
கார்த்திக் ராஜா இசை. ஓளிப்பதிவு செழியன். வரும் வெள்ளிக்கிழமை படம் திரைக்கு வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.