ஆண்டுதோறும் தன் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தனது ‘அகரம்’ பவுண்டேஷன் மூலமாக செய்து வருகிறார் நடிகர் சூர்யா. குறிப்பாக கல்விக்கான உதவிகளை பெரும் அளவில் செய்து வருகிறார்.
அதைப்போலவே தனது பிறந்தநாளை முன்னிட்டு பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் கார்த்தி. தனது அண்ணன் வழியில் இந்த சேவை ஒவ்வொரு பிறந்த நாள் விழாவுக்கும் தொடரும் என்கிறார்.
அவ்வகையில் குன்றத்தூர் அருகேயுள்ள ட்ராப்ஸ் முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்காக ரூ.50 ஆயிரம் வழங்கினார்.
மேலும், புரசைவாக்கம் மற்றும் ராயபுரத்தில் உள்ள அரசு சீர்திருத்த பள்ளிகளுக்கும் சென்று அப்பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, மின்விசிறி போன்றவற்றுக்கான தொகையை வழங்கினார்.
இதற்கான ஏற்பாட்டை அகில இந்திய கார்த்தி ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். நல்ல விஷயம்... இன்னும் நெறைய பண்ணுங்க, ‘பையா...’

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.