1983ல் தனது நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் படத்தை தனது மகன் பிரசாந்தை வைத்து ரீமேக் செய்து வருகிறார் தியாகராஜன். படத்தை தயாரிப்பதுடன் இயக்குவதும் அவரே.
மம்பட்டியான் படத்தில் நிறைய சுவாரஸியங்கள். முக்கியமாக சண்டைக் காட்சிகள். பாதி கட்டி முடித்த பில்டிங்கில் தலைமுடி வளர்த்த வில்லன்களுடன்தான் ஹீரோக்கள் சண்டையிடுவார்கள். இந்தப் படத்தில் சற்று வித்தியாசமாக லொகேஷனை கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு மாற்றியிருக்கிறார்கள்.
அதேபோல் ஹீரோ சண்டையிடுவதும் மனிதர்களுடன் அல்ல, காட்டெருமை, யானை போன்ற மிருகங்களுடன். எப்படி இதை லைவ்வாக ஷூட் செய்தார்கள் என்பதே மிகப்பெரிய பிரமிப்பு.
ஒரிஜினல் மம்பட்டியானில் ஹீரோயின் சரிதா. அவருடன் ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். ரீமேக்கில் பிரசாந்துக்கு ஜோடி மீரா ஜாஸ்மின். ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கான். சில்க் நடித்த வேடத்தில் மல்லிகா ஷெராவத்தை நடிக்க வைக்க இருக்கிறார்கள்.
இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கோட்டா ஸ்ரீனிவாசராவ், ரியாஸ்கான், வடிவேலு, விஜயகுமார், கலைராணி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.
இன்னும் ஓரிரு மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.