இருநூறு ரூபாய் வாடகை லாட்ஜில் ஐந்து பேர் அடைந்து கிடந்து கதை விவாதம் நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் கதை விவாதமாக இருந்தாலும், பாடல் கம்போஸிங்காக இருந்தாலும் வெளிநாடு பறப்பதுதான் ஃபேஷன்.
சிம்பு தனது வாலிபன் படத்தின் கதை விவாதத்துக்காக பாங்காங் சென்றார். சிம்புவை வைத்து இயக்கும் படத்தின் கதை விவாதத்துக்காக லிங்குசாமி சென்றிருப்பது அயர்லாந்த்.
பையா படத்துக்குப் பிறகு விஜய்யை வைத்து படம் இயக்க விரும்பினார் லிங்கு. விஜய்க்காக கதை தயார் செய்திருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை. விஜய்க்குப் பதில் லிங்குவின் தூண்டிலில் சிக்கியவர் சிம்பு. அவர் நடிக்கும் படத்தைதான் லிங்குசாமி அடுத்து இயக்கவுள்ளார்.
பையா கண்டபடி ஓடுவதால் எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் லிங்குசாமிக்கு ஆஃபர்கள் வருகின்றன. மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் இருக்கும் மம்முட்டி, லிங்குசாமியை அணுகியிருக்கிறார். சிம்பு நடிக்கும் படம் முடிந்ததும் மம்முட்டியின் மகன் நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்குவார் என்கிறார்கள்.

Nice
ReplyDelete