திருமணம் செய்து கொள்ளப் போகிறார், இனி சினிமாவில் நடிக்க மாட்டார். தன்னைப் பற்றி வந்த இந்தத் தகவலை மறுப்பதுதான் இப்போதைக்கு பூஜாவின் ஒரே வேலை. செய்தியை மறுத்தாலும் அதில் சில விஷயங்களை ஒப்புக் கொள்ளவே செய்கிறார்.
அதாவது அவரது பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கிறார்களாம். இதற்கு பூஜாவும் சம்மதித்திருக்கிறார். “திருமணம் செய்து கொள்ளப் போவதால் நடிக்க மாட்டேன் என்று சொல்வது சரியல்ல” என்கிறார் பூஜா.
தற்போது இவர் நடித்துவரும் ஒரே படம், துரோகி. இதிலும் கெஸ்ட் ரோல்தான். படத்தை இயக்கும் சுதா பூஜாவின் நெருங்கிய தோழி. அதன் காரணமாகவே துரோகியில் நடித்துள்ளார். இதுதவிர வேறு படங்கள் எதுவுமில்லையே என்று கேட்டால், நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். இப்போது ஒரு படத்தின் கதை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார். அது எந்தப் படம் என்று கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார் பூஜா.
என்னமோ நடக்குது... மர்மமா இருக்குது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.