மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விவேக் படம் மே 21 முதல்

விவேக் நடித்த மகனே என் மருமகனே படம் ஒருவழியாக திரைக்கு வருகிறது. ஹீரோவாக விவேக் தேர்வாரா என்பதைச் சொல்லும் கடைசி ப‌ரிசோதனை இந்தப் படம்.

பத்தி‌ரிகையாளர்களையும் அவர்கள் குடும்பத்தையும் தரக்குறைவாகப் பேசிய பிறகு விவேக் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பத்தி‌ரிகையாளர்கள் புறக்கணித்து வந்தனர். அவர் பேச எழுந்தால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும் வெளிநடப்பு செய்வார்கள். இந்தப் புறக்கணிப்பு விவேக்கைவிட அவரை வைத்து படம் தயாரித்தவர்களைதான் அதிகம் பயப்பட வைத்தது. இந்த எதிர்ப்பின் காரணமாக படம் ஊத்திக் கொண்டால்?

இந்த ஒரே காரணத்துக்காக டி.பி.கஜேந்திரன் இயக்கிய மகனே என் மருமகனே பட ‌ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. காரணம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் விவேக்கும் ஒருவர்.

சமீபத்தில் ஒவ்வொரு பத்தி‌ரிகையாளர்களையும் தனது பிரஸ்மீட்டுக்கு முட்டிப் போடாத குறையாக அழைத்து எல்லோர் முன்பும் மன்னிப்பு கேட்டார் விவேக். அதன் பிறகே பத்தி‌ரிகையாளர்கள் சமாதானமடைந்தனர். அதன் விளைவு இப்போதே தெ‌ரியத் தொடங்கியுள்ளது.

பல மாதங்களாக தள்ளிப்போன மகனே என் மருமகனே இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. கெட்டப் போடுவது, குரலை மாற்றிப் பேசுவது என்று இந்தப் படத்திலாவது கடிக்க மாட்டார் என நம்புவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.