மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஐம்பது பரோட்டா சாப்பிட்டதுக்கு பதினைந்து லட்சம்

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் சூ‌ரியை நினைவிருக்கிறதா? ஐம்பது பரோட்டாவை அப்படியே சாப்பிடுகிறவர்?

சமீபத்தில் அவரை ஒப்பந்தம் செய்ய சென்ற இயக்குனர் அலறியடித்து ஓடி வந்திருக்கிறார். காரணம் சூ‌ரி சொன்ன பேமெண்ட்.

வெண்ணிலா கபடிக்குழுவுக்குப் பிறகு சூ‌ரியின் முகமும், பெயரும் தெ‌ரியிற மாதி‌ரி ஒரு படமும் வரவில்லை. நான்கைந்து படங்களில் நடித்துக் கொண்டிருப்பது உண்மை.

இந்நிலையில் தனது படத்தில் நடிப்பதற்காக சூ‌ரியை கேட்டிருக்கிறார் ஒரு அறிமுக இயக்குனர். அவ‌ரிடம் சம்பளமாக சூ‌ரி கேட்டது பதினைந்து லட்சங்கள். திணறிப்போன இயக்குனர், எனக்கு வாரக்கணக்கில் எல்லாம் கால்ஷீட் வேண்டாம், நாட்கணக்கில் போதும் என்றிருக்கிறார்.

அப்படியா? நாள் கணக்குன்னா ஒரு நாளைக்கு எழுபத்தைந்தாயிரம் கொடுத்திடுங்க என்று கேட்க துண்டை காணோம் துவைச்சுப் போட்ட துணியை காணோம்னு ஓடி வந்திருக்கிறார் இயக்குனர்.

ஐம்பது பரோட்டா சாப்டதுக்கே பதினைந்து லட்சம்னா... தலை சுத்துது சாமி.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.