ஆகஸ்ட் மாதம் எந்திரன் வெளியாகும் என்று ரஜினி அறிவித்தாலும், படத்தின் ரிலீஸ் மேலும் இரு மாதங்கள் தள்ளிப் போகும் என்கிறார்கள். ஆனாலும் படத்தை புரமோட் செய்யும் வேலையை இப்போதே தொடங்கிவிட்டது சன் பிக்சர்ஸ்.
ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்களை துபாயில் வெளியிட சன் பிக்சர்ஸ் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்தத் தமிழப் படத்தின் பாடல்களும் துபாயில் வெளியிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யுகே, யுஎஸ்ஏ, ஆஸ்திரேலியா போன்று துபாயிலும் கணிசமான அளவில் இந்தியர்கள் உள்ளனர். தற்போது இந்தியில் வெளியாகியிருக்கும் ராஜ்நீதி துபாயில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியர்கள் அங்கு அதிகமிருப்பதே இதற்கு காரணம்.
இந்த வியாபார சந்தையை சன் பிக்சர்ஸ் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. அதனால்தான் துபாயில் பாடல் வெளியீட்டு விழாவை நடத்த தீர்மானித்துள்ளனர் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.