ஆளே இல்லா ஊருக்கு... என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்களே. அதற்கு நூறு சதவீத பொருத்தம், தமன்னா. த்ரிஷா, அசின் போன்றவர்கள் இந்திப் பக்கம் ஒதுங்கியதால் கோடம்பாக்கத்தில் கொண்டாடப்பட்டவர் இவர். அந்த அதிர்ஷ்டம் இப்போது மெல்ல மெல்ல சாயம் போகத் தொடங்கியிருக்கிறது.
விஜய், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் தனது சம்பளத்தை ஒரு கோடி என்று உயர்த்தினார். இந்த ஒரு கோடியில் அவர் ஸ்ட்ராங்காக உட்காரும் முன்பே ஆந்திராவிலிருந்து புயலடிக்கத் தொடங்கியது. சிங்கம் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அதேபோல் ஹன்சிகா மோத்வானி காட்டிலும் அடை மழை.
ஹன்சிகா தனுஷுடன் மாப்பிள்ளை, விஜய்யுடன் வேலாயுதம் என்று டாப் கியரில் எகிறுகிறார். அசினும் காவல்காரன் படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். அஜித்தை வைத்து கௌதம் இயக்கும் படத்தில் அஜித் ஜோடியாக தெலுங்கு நடிகை சமந்தா நடிக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில் தமன்னாவுக்கு தண்ணி தெளிப்பதில் வேகம் காட்டுகிறது கோடம்பாக்கம்.
ஆனால் இந்த சரிவை உணராமல் ஒரு கோடி கேட்டு அம்மணி சலம்புவதுதான் வேடிக்கை.

So nice tham.....
ReplyDelete