மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> எந்திரன் ‌ரிலீஸ் பற்றிய ர‌ஜினியின் பதில்

எந்திரன் எப்போது ‌ரிலீஸ்? கோடம்பாக்கத்தை கலக்கும் மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு ர‌ஜினியே பதிலளித்துள்ளார்.

சென்னைத் தீவுத்திடலில் கோடை திருவிழா நடந்து வருகிறது. வைரமுத்துவின் மகனும், அமைச்சர் ப‌ரிதி இளம்வழுதியின் மகனும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளனர். அவர்களின் அழைப்பை ஏற்று கோடை திருவிழாவுக்கு ர‌ஜினி வந்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

எந்திரன் எப்போது ‌ரிலீஸ் என்ற கேள்விக்கு, ஒரேயொரு பாடல் காட்சி மட்டுமே இனி படமாக்கப்பட வேண்டும். அனேகமாக ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வந்துவிடும் என்று பதிலளித்தார்.

ர‌ஜினியே நேரடியாக இதனை தெ‌ரிவித்திருப்பதால் எந்திரன் தீபாவளிக்கு முன் திரைக்கு வந்துவிடும் என உறுதியாக நம்பலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.