மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஹ‌ரிஷ் காட்டில் விடா மழை.

மாத்தியோசி, கோ‌ரிப்பாளையம் படங்களில் நடித்த ஹ‌ரிஷ்தான் இப்போது பட்ஜெட் பட இயக்குனர்களின் பேவரைட் ஹீரோ. இமே‌ஜ் பார்ப்பதில்லை, தேவையில்லாத இம்சை கொடுப்பதில்லை, கோடிகளில் சம்பளம் கேட்பதில்லை... இது போதாதா?

ஹ‌ரிஷின் ஆக்ரோஷமான நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. இதனால் அவரை ஒப்பந்தம் செய்ய இயக்குனர்கள் முட்டி மோதுகிறார்கள். ராசுமதுரவன் தனது அடுத்தப் படமான முத்துக்கு முத்தாக வில் ஹ‌ரிஷை கதாநாயகனாக்கியிருக்கிறார். இதுதவிர வசந்த பாலனின் அசிஸ்டெண்ட் சரவணன் இயக்கும் புதிய படத்திலும் ஹ‌ரிஷ்தான் ஹீரோ.

சிம்புதேவனின் அசிஸ்டெண்ட் இயக்கும் படத்திலும் ஹ‌ரிஷ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த அசிஸ்டெண்டின் பெயரும் சரவணன்தான். ஒரே ஹீரோவை ஒரே பெயருள்ள இயக்குனர்கள் தனித்தனியாக இயக்குவதால் பெயர் குழப்பத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.