மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விண்ணைத்தாண்டி நூறாவது நாள் வருவாயா

சினிமாக்காரர்களின் பாரசூட் திய‌ரிக்கு‌ப் (ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடுவது) பிறகு படங்கள் ஐம்பது நாளை தாண்டவே திணறுகின்றன. இந்நிலையில் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது கௌதம் வாசுதேவ் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா.

அடிதடி ஆ‌க்சன் படங்களுக்குதான் இப்போது மார்க்கெட் என்ற மாயையை இந்த மென் காதல் திரைப்படம் நொறுக்கியது. மேலும் சிம்புவுக்கு இப்படம் புது அடையாளமாகவும் அமைந்தது.

படத்தின் வெற்றிக்கு கௌதமின் மேக்கிங் ஒரு காரணமென்றால் இன்னொரு காரணம் ரஹ்மானின் இசை. இந்தப் படத்தில் இடம்பெற்ற ஹோசானா பாடலை முணுமுணுக்காத தமிழ் உதடுகள் மிகக் குறைவு.

வசூலில் அனைத்து தரப்பினரையும் இப்படம் குளிர்வித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஏ சென்டர்களில் படம் அமோக விளைச்சலை கொடுத்துள்ளது. சென்னை சிட்டியில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது பையா படத்தின் சென்னை வசூலைவிட அதிகம் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

கௌதமின் அடுத்தடுத்தப் படங்களும் வசூலை குவிக்க நமது வாழ்த்துகள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.