
ஒத்துழைப்பு மறுப்பு என்று முதலில் அறிவித்தபோது நடிகர் சங்கத்தில் இருதரப்புக்கும் நடுவில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. விஜய் சொன்ன உடன்படிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இரண்டாவது முறையாகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.
திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் ஒருபிரிவினர் விஜய்க்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன். இவருக்கு அழைப்பு அனுப்பாமலேயே விஜய்க்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
அபிராமி ராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் படத்தை திரையிடுவதில் எந்த தடையும் இல்லை என கிளீன் சர்ட்டிபிகேட் கொடுத்திருப்பதால் விஜய்க்கு எதிரான தடை பிசுபிசுக்கும் என்றே தெரிகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.