மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஏந்திரனின் சாதனை இன்னும் தொடரும்.

எந்திரன் திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், இல்லையில்லை இரண்டாயிரம் திரையரங்குகள் என்றும் பலவித செய்திகள் வருகின்றன. படம் வெளியாகி தயா‌ரிப்பு நிறுவனம் ச‌ரியான தகவலை சொன்னால் மட்டுமே உண்மை எண்ணிக்கை தெ‌ரியவரும்.

என்றாலும் திரையரங்குகளின் எண்ணிக்கை இந்திய அளவில் சாதனை படைக்கும் ஒன்றாக இருக்கும் என்று மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

படம் என்று வெளியாகிறது என்பதை அறிவிக்கும் முன்பே எந்தெந்த திரையரங்குகளில் படம் வெளியாகிறது என்பதை அறிவித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் எந்திரன் திரைப்படம் 30 திரையரங்குகளில் வெளியாகிறது.

சந்தேகமில்லாமல் தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இதுதான் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம். இந்த முப்பதில் கோயம்பேடு, அம்பத்தூர், திருவான்மியூர் போன்ற புறநகர் திரையரங்குகள் இல்லை என்பதும், அவற்றையும் சேர்த்தால் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டும் என்பதும் முக்கியமானது.

ஏந்திரனின் சாதனை இன்னும் தொடரும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.