மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இணையும் சூப்பர் ஸ்டார்கள்

கமலும் ர‌ஜினியும் இணைந்து படம் செய்வார்களா என பல பத்து வருடங்களாக தமிழ் ரசிகன் ஏங்கிக் கொண்டிருக்கிறான். அதற்கான சூழல் இன்னும் இருபது வருடத்துக்கு இருக்கும் போல தெ‌ரியவில்லை.

ஆனால் கேரளாவில் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்க தயங்குவதேயில்லை.

கடைசியாக இருவரும் டுவென்டி 20 படத்தில் இணைந்து நடித்தனர். விரைவில் இவர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

மம்முட்டியின் பிளே ஹவுஸ் தயா‌ரிப்பு நிறுவனம் அரக்கள்ளன் முக்கா கள்ளன் (அரைக் கள்வ‌‌ன் முக்கால் கள்வன்) என்ற படத்தை தயா‌ரிக்கிறது. இதில்தான் மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கிறார்கள்.

அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படம் ஒரு க்ரைம் த்‌ரில்லர் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.