மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 5 படங்கள் தீபாவளிக்கு.

எந்திரன் ஃபீவர் தீபாவளி தாண்டியும் நீடிக்கும் என்று கருதப்படுவதால் மினிமம் பட்ஜெட் படங்கள் தீபாவளியை தவிர்ப்பதில் குறியாக உள்ளன. இன்றைய சூழலில் ஐந்து படங்கள் மட்டுமே திரைக்கு வரும் என்று தெ‌ரிகிறது.

முதலில் ரத்த ச‌ரித்திரம். தயாநிதி அழகி‌ரி இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என சம்பந்தப்பட்டவர்களே தெ‌ரிவித்துள்ளனர்.

இரண்டாவது ஆர்யாவின் சிக்குபுக்கு. ஸ்ரேயா ஜோடியாக நடித்திருக்கும் இந்த ரொமா‌ண்டிக் காமெடியும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

மூன்றாவது கமல், பாலாவால் பாராட்டப்பட்ட பிரபுசாலமனின் மைனா. ரெட் ஜெயண்ட் மூவிஸ் மைனாவை ஏ‌ஜிஎஸ் உடன் இணைந்து வெளியிடுகிறது.

நான்காவது உத்தமபுத்திரன். தெலுங்கில் வெற்றி பெற்ற ரெடியின் ‌‌ரீமேக் என்பதால் நிச்சய வெற்றி என்ற நம்பிக்கையுடன் உத்தமபுத்திரன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

ஐந்தாவது வ குவாட்டர் கட்டிங். ட்ரெய்ல‌ரிலேயே படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்‌ரி மிரட்டியிருக்கிறார்கள். இந்தப் படத்தையும் கிளவுட் நைனே வெளியிடுகிறது.

கடைசி நேரத்தில் இந்தப் பட்டியலில் இருந்து சில படங்கள் விடுபடவும், சில புதிதாகச் சேர்ந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.