நடிகர் கம் இயக்குனர் பிரபுதேவாவின் சட்டப்படி மனைவியான ரமலத் சென்னை குடும்பல நல நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
1995ல் பிரபுதேவா ரமலத்தை ரகசிய திருமணம் செய்து கொண்டார். முஸ்லீமான ரமலத் பிரபுதேவா மீதான காதல் காரணமாக தனது பெயரை மாற்றிக் கொண்டதுடன், இந்து முறைப்படி பிரபுதேவாவை மணந்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் பிரபுதேவா நயன்தாராவுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்தே பல விழாக்களில் கலந்து கொண்டனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விருது விழா ஒன்றில் பிரபுதேவா, நயன்தாரா கள்ளக் காதல் ஜோடியை சிறந்த தம்பதியாக அறிவித்து விருதும் வழங்கினர்.
விஷயம் கை மீறியதை உணர்ந்த ரமலத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கணவர் பிரபுதேவா குடும்பச் செலவுகளுக்கே பணம் தருவதில்லையென்றும், நயன்தாரா பிரபுதேவாவை தடுப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். கணவர் பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பது ரமலத்தின் கோரிக்கை.
சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவருடன் சேர்த்து வையுங்கள் என்றும், மனைவியை சேர்த்து வையுங்கள் என்றும் நூற்றக்கணக்கான மனுக்கள் தினம் வருகின்றன. பிரபுதேவா, நயன்தாரா பிரபலமானவர்கள் என்பதால் இந்த வழக்கில் மட்டும் மீடியாக்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.