
சூர்யா நடிப்பில் வெளிவந்த அயன் சென்ற வருடம் வெளியான படங்களில் அதிக லாபம் சம்பாதித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. ஜக்குபாய் அளவுக்கு மோசம் என்றாலும் ஆதவன் முதலுக்கு மோசம் செய்யவில்லை.
இந்த வருடம் சிங்கம் வெளியாகியிருக்கிறது. ஏ, பி, சி என்று அனைத்து சென்டர்களிலும் சிங்கம் வசூலில் சீறிப் பாய்கிறது. திரையரங்குகளில் நிரந்தரமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது ஹவுஸ்ஃபுல் போர்ட்.
சூர்யா படமென்றால் கமர்ஷியலாக இருந்தாலும் தனது கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைத்திருப்பார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே உள்ளது. அந்த நம்பிக்கை இதுவரை சேதாரமாகாமல் இருப்பதால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன.
விஜய்யின் சுறா சென்னையில் எந்த திரையரங்கிலும் ஓடவில்லை. சுறா வெளியான திரையரங்குகள் அனைத்தையும் சிங்கம் ஆக்கிரமித்துள்ளது. விஜய் ஓரங்கட்டப்பட்டதை சிங்கத்தின் கலெக்சன் கர்ஜனை உறுதி செய்வதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
vijay enimelavadhu orey madhiri kadhai choose pannama erukurathu nallathu
ReplyDelete