
தமிழ்ப் படங்களில் மட்டும்தான் இதுவரை டி.ஆர். கவனம் செலுத்தி வந்தார். தமிழில் நடித்தால் ஆறரை கோடி பேரை மட்டும்தானே எட்ட முடியும்? அதுவே பாலிவுட் என்றால்...? அறுபது கோடி பேரை எளிதாக சென்றடையலாம்.
தனது அங்க அடையாளமான மீசை தாடியுடன்தான் பாலிவுட்டில் அரங்கேற திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தி டியூஷன், பாடி ஸ்லிம் ஜிம் என்று எல்கேஜி ஸ்டூடண்டாக ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருக்கிறார்.
முக்கியமான விஷயம் தமிழைப் போல் கதை, திரைக்கதை, வசனம், இசை, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், நடிப்பு என எல்லாமே டி.ஆர்.தான்.
தமிழ்நாட்டிலிருந்து அஷ்டவதானி சுனாமியொன்று தங்களை தாக்கப் போவது பாவம் பாலிவுட்காரர்களுக்கு இதுவரை தெரியாது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.