மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நதியா குஷ்பு இடத்தை நிரப்புவாரா ?

அரசியலே எனக்குப் பிடிக்காது என்று ஆரம்பத்தில் சொன்ன குஷ்பு இப்போது திமுக-வின் திடீர் பிரமுகர். மேலவையில் ஒன்று இவருக்கு கன்ஃபார்ம் என்கிறார்கள். பேட்டி, பிரச்சாரம் என்று அம்மணி எப்போது வேண்டுமானாலும் தீப்பிடிக்கும் ஆயத்தங்களுடன் தயாராக இருக்கிறார்.

குஷ்பு திமுக-வில் சேர்ந்ததும் நடந்த முதல் மாற்றம் ஜெயா தொலைக்காட்சியின் ஜாக்பாட் நிகழ்ச்சியிலிருந்து அவர் தூக்கப்பட்டதுதான். பார்வையாளர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு குஷ்புவுக்கு சற்றும் இளைக்காத ஒருவரை காம்பியராகப் போட தீவிரமாக இருக்கிறது ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம்.

அவர்கள் தேடி இறுதியாக டிக் செய்திருப்பது முன்னாள் ஹீரோயின் நதியாவை. தொலைக்காட்சி காம்பியர் என்றதும் முதலில் மறுத்த நதியா ஜாக்பாட் நிகழ்ச்சியின் பாப்புலா‌ரிட்டியை உணர்ந்து ஓகே சொல்லியிருப்பதாக தொலைக்காட்சி வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.