மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அவஸ்தைப்பட்ட திவ்யா.

சிங்கம் புலியில் ஜீவாவுக்கு இரட்டை வேடம். ஒருவர் மீன் வியாபாரி. இன்னொருவர் வக்கீல். மீன்காரராக வரும் ஜீவாவுக்கு திவ்யா ஜோடியாக நடிக்கிறார்.

ஜீவா - திவ்யா சம்பந்தப்பட்ட காட்சியொன்று சமீபத்தில் ராயபுரம் மீன் சந்தையில் படமாக்கப்பட்டது. நாளுக்கொரு பெர்ஃப்யூம் பயன்படுத்தும் நடிகையை மீன் மார்க்கெட்டில் விட்டால் என்னாகும்? சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குவதற்குள் திவ்யா தடுமாறிப் போய்விட்டார்.

மீன் வாசனை தாங்காமல் அடிக்கடி அவருக்கு வழங்கப்பட்ட கேரவனுக்குள் தஞ்சம் புகுவதைப் பார்த்து, முடிந்தவரை சீக்கிரமாக அந்தக் காட்சியைப் படமாக்கி முடித்தாராம் இயக்குநர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.