மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்த - ஆர்யா.

தமிழில் நடிக்கும் சில மலையாள நடிகர்கள் மலையாளச் சேனல்களுக்கு பேட்டியளிக்கும் போது தமிழை மட்டம் தட்டியும், மலையாளத்தை உயர்த்தியும் வார்த்தைகளை விடுவதுண்டு. பல நேரம் இது கவனிக்கப்படுவதில்லை.

ஆர்யா துபாயில் நடந்த மலையாள விழவொன்றில் அப்படி பேசிவிட்டதாக எழுந்த பிரச்சனைகள் நாடறியும். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வருத்தம் தெ‌ரிவித்துள்ளார்.

தன்னை வாழ வைப்பது தமிழ் ரசிகர்களும், தமிழ் திரையுலகமும்தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் ஆர்யா, அதை தான் நன்றாக பு‌ரிந்து வைத்திருப்பதாகவும், பலரும் சொல்வது போல் தான் பேசவில்லையென்றும், அப்படியும் என்னுடைய பேச்சு யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால் இதயசுத்தியோடு வருத்தம் தெ‌ரிவிப்பதாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவின் இந்த விளக்கம் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.