நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பிரபுதேவாவுக்கு பல முகங்கள். ஆனால், சில காலமாக அவரது சர்ச்சை முகம்தான் பத்திரிகைகளின் பரபரப்பான தீனி. இந்நிலையில் பத்திரிகையாளர்களை திடீரென சந்தித்தார் பிரபுதேவா. அனைவரும் கேட்க நினைத்த கேள்வியை, ‘அது மட்டும் வேண்டாமே’ என்ற ஒற்றை வாக்கியத்தில் ஒதுக்கித் தள்ளியவரின் சினிமா குறித்த எண்ணங்கள் உங்களுக்காக
போக்கிரி, வான்டட் படங்களுக்குப் பிறகு பிரபுதேவா பிஸியான இயக்குனர். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தை முடித்துவிட்டு அடுத்தப் படத்துக்கு சென்றுவிட்டார். இந்த பிஸி ஷெட்யூலுக்கு நடுவிலும் இரு படங்களில் நடித்து வருகிறார். இது எப்படி சாத்தியம்?
போக்கிரி, வான்டட் படங்களுக்குப் பிறகு பிரபுதேவா பிஸியான இயக்குனர். ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் எங்கேயும் காதல் படத்தை முடித்துவிட்டு அடுத்தப் படத்துக்கு சென்றுவிட்டார். இந்த பிஸி ஷெட்யூலுக்கு நடுவிலும் இரு படங்களில் நடித்து வருகிறார். இது எப்படி சாத்தியம்?
“என் வாழ்வில் பல விஷயங்கள் எதிர்பாராமல் நடந்தது. என் பாதை, பயணம் எல்லாம் எனது விருப்பமாக இல்லாமல் காலம்தான் முடிவு செய்தது. நான் நடிகரானதும், இயக்குனரானதும் அப்படிதான். படம் இயக்கப் போய்விட்டால் அந்த வேலையை மட்டுமே பார்ப்பேன். அதேபோல் நடிக்கப் போய்விட்டால் என்னுடைய மனதில் அது மட்டுமே இருக்கும். நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிடுவேன். அதனால் படம் இயக்கவும், நடிக்கவும் என்னால் ஒரே நேரத்தில் முடிகிறது. இப்போது நான் நடிக்கிற இரு படங்களுமே மிக நல்லப் படங்கள்.”
ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராகும் போது அவர்களே ஒளிப்பதிவையும் பார்த்துக் கொள்வார்கள். பாடலாசிரியர்கள் ஹீரோவாகும் போது அவர்களே படத்தின் பாடல்களையும் எழுதுவார்கள். ஆனால், பிரபுதேவா நடன இயக்குனராக இருந்தாலும் தான் இயக்கும் படங்களில் பிற நடன இயக்குனர்களுக்குதான் வாய்ப்பு தருகிறார். இது ஆச்சரியமான விஷயம்.
“இதற்கு நான் முதலில் சொன்ன விளக்கம்தான் காரணம். இயக்குனராக இருக்கும் போது அதில்தான் எனது முழுக் கவனமும் இருக்கும். எனது எங்கேயும் காதல் படத்திலும் நான் நடனம் அமைக்கவில்லை. இது இப்படியே தொடரும் என்றுதான் நினைக்கிறேன்.”
தற்போது நடித்து வரும் படங்கள்...
“முதலில் தங்கர்பச்சானின் களவாடிய பொழுதுகள். தங்கர்பச்சான் கோபக்காரர். என்றாலும் எங்களுக்குள் ஆழமான புரிதலும், நட்பும் உண்டு. என்னுடைய கமர்ஷியல் இமேஜை கழற்றி வைத்துவிட்டுதான் இந்தப் படத்தில் நடிக்கிறேன். அருமையான கதை. அழகி போல பேசப்படும்.
“இன்னொரு படம் சந்தோஷ் சிவன் இயக்கும் உறுமி. என்னுடன் பிருத்விராஜ், ஜெனிலியா நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே வித்தியாசமான படம். என்னுடைய மறக்க முடியாத படம் என்று இதனை சொல்லலாம்.”
போக்கரி, வில்லு என்று அதிரடிப் படங்கள் தந்த பிரபுதேவாவின் அடுத்தப் படம், எங்கேயும் காதல் ஆர்ப்பாட்டமில்லாத காதல் கதை.
“ஆண் மீது பெண்ணுக்கு வரும் வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதை சொல்லியிருக்கும் விதம் புதுசாக இருக்கும். எல்லோரையும் இந்தப் படம் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
பிரபுதேவா தனது படங்களின் சில வசன காட்சிகளையும், பாடல் காட்சிகளையும் வெளிநாட்டில் படமர்கியிருக்கிறார். என்றாலும் எங்கேயும் காதல் அவற்றையெல்லாம்விட ஸ்பெஷலானது.
“ஆமாம், எங்கேயும் காதல் படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் பிரான்சில் நடத்தியிருக்கிறோம். கதை நடக்கும் இடமே ரசிகர்களை பெரிதாக கவரும்.”
ஜெயம் ரவி பற்றி...
“ரவி எப்போதுமே இயக்குனரின் நடிகர், ரொம்பத் திறமையானவர்.”
மென்மையான காதலை எங்கேயும் காதலில் சொல்லியிருப்பவர் அடுத்து ஆக்ரோஷமான கதையை கையிலெடுத்திருக்கிறார்.
“இப்போது விஷால் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறேன். சமீரா ரெட்டி ஹீரோயின். இதுவொரு ஆக்சன் படம். ஜிகே கார்ப்பரேஷன் படத்தை தயாரிக்கிறது.”
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.