மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சென்டிமெண்ட் OF ஜெயம் ராஜா.

தம்பி ஜெயம் ரவியை மட்டுமே இயக்கிவந்த ஜெயம் ராஜா முதல் முறையாக விஜய்யை வைத்து இயக்கும் படம் வேலாயுதம். ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை தயா‌ரிக்கிறார்.

ஜெயம் ராஜாவின் முதல் படம் ஜெயத்தில் ரயில் காட்சிகள் பிரதானமாக இடம்பெற்றன. ரயிலைப் பற்றி பாடல்கூட இடம்பெற்றது. ஜெயம் சென்டிமெண்டை வேலாயுதத்திலும் வைத்திருக்கிறார் இவர். வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பின்னி மில்லில் ரயில் நிலைய அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியையும் ரயில் நிலையத்தில் வைக்க வேண்டும் என்பது ஜெயம் ராஜாவின் விருப்பம். இதற்காக விசாகப்பட்டினத்தில் அரங்கு அமைக்க உள்ளனர்.

பேசாமல் படத்துக்கு புகைவண்டி என்று பெயர் வைக்கலாம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.