150 கோடியில் எந்திரன் எடுத்த பிறகு, 200 கோடி வரை ஒரு படத்துக்கு செலவழித்தாலும் லாபம் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை சன் பிக்சர்ஸ் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நம்பிக்கையை முதலில் அறுவடை செய்யப் போகிறவர் மணிரத்னம் என்கின்றன தகவல்கள்.
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்குகிறார் மணிரத்னம். இதற்கு பெரும் தொகை தேவை. அதாவது 200 கோடிக்கும் மேல். இந்தப் பெரும் தொகை இப்போதைக்கு சன் பிக்சர்ஸிடம் மட்டுமே உள்ளது.
மணிரத்னத்தின் படம் என்றால் வடக்கேயும் வெளியிட்டு கல்லாகட்ட முடியும். சுமாரான ராவணனே இரண்டு வாரங்களில் இருபது கோடிக்குமேல் வடக்கே வசூல் செய்தது.
இதையெல்லாம் கூட்டிக் கழித்த சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
விரைவில் ஆச்சரிய அறிவிப்பை எதிர்பாருங்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.