மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ரானாவில் ர‌ஜினி அதிருப்தி.

தனது கதை, திரைக்கதையில் உருவாவதால் ரானாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் ர‌ஜினி. படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணி தாமதமாகியுள்ளது. இதனால் படப்பிடிப்பையே சில நாட்களுக்கு ர‌ஜினி தள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரானாவில் மொத்தம் ஏழு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் மூன்று பேர் ர‌ஜினிக்கு ஜோடி. இந்த மூவ‌ரில் முக்கியமானவர் தீபிகா படுகோன். இவரும், ர‌ஜினியும் இடம்பெற்ற போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த போட்டோ ஷூட் ர‌ஜினிக்கு அத்தனை திருப்தி அளிக்கவில்லை.

ரானா ச‌ரித்திரப் படம். போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்டப் படங்களில் தீபிகாவின் தோற்றம் அதனை பிரதிபலிக்கும் வகையில் இல்லையாம். இதனால் தீபிகாவின் தோற்றத்தை ச‌ரித்திர காலத்துக்கேற்ப மாற்றி மீண்டுமொருமுறை போட்டோ ஷூட் நடத்தப்படலாம் என்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.