தேர்தல் பிரச்சாரத்தால் திமுகவை குளிரச் செய்தாலும் தொழில் விஷயத்தில் குளிரடித்துப் போய் கிடக்கிறார் வடிவேலு. இன்றைய தேதியில் இவர் கைவசம் எந்தப் படங்களும் இல்லை.
அது மட்டுமா... தனது படத்தில் வடிவேலு இருந்தேயாகணும் என்று விரும்பும் ரஜினிகூட இவரை வேண்டாம் என்று கஞ்சா கருப்பு பக்கம் கை நீட்டியிருக்கிறார். சந்திரமுகியின் வெற்றியில் வடிவேலுவின் பங்கு அதிகம் என மனசுவிட்டு பாராட்டிய ரஜினி குசேலனிலும் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்தார். ரானாவிலும் இவர்தான் நடிப்பதாக இருந்ததாம்.
தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலு தாறுமாறாக பேசியது ரஜினியை அப்செட்டாக்கியிருக்கிறது. இதனால் வடிவேலுக்குப் பதில் கஞ்சா கருப்புக்கு வாய்ப்பளித்திருக்கிறாராம்.
வைகைப் புயலுக்கு இது சனி திசை.
கலைஞரால் கவிழ்ந்தவர்களின் பட்டியலில் வடிவேலு குஷ்பு ஆகியவர்கள் சமீபத்திய பதிவுகள்.
ReplyDeleteநண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்று அனுபவித்துத் தான் சொன்னார்கள்.