சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது ஜீவாவின் கோ.
சென்ற வாரம் வெளியான சுசீந்திரனின் அழகர் சாமியின் குதிரை முதல் மூன்று தினங்களில் 12.65 லட்சங்களை வசூலித்து 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
வானம் சென்ற வார இறுதியில் 31.4 லட்சங்களை வசூலித்து 3வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல் 2.9 கோடிகள்.
எங்கேயும் காதல் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களை எந்த வகையிலும் கவராத இப்படம் சென்ற வார இறுதியில் 37.2 லட்சங்களை வசூலித்திருப்பது ஆச்சரியம். இதன் இதுவரையான சென்னை வசூல் 1.39 கோடி.
முதலிடத்தில் கோ. கமர்ஷியலில் கொஞ்சம் சமூக அக்கறை களிம்பு தடவினால் கல்லாவை நிறைக்கலாம் என்பதற்கு இப்படம் சான்று. 50 லட்சங்களை கடந்த வார இறுதியில் வசூலித்த இப்படம் இதுவரை 4.48 கோடிகளை சென்னையில் வசூலித்திருக்கிறது. சிங்கம், சிறுத்தையைவிட இந்த வசூல் மிக அதிகம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.