![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCP01wT721rUWUJPuIyySVHzaMBqXLGH6ahE_GOIYTbpY-UCjHl5crK_jiUfVhwYA20Q_yTGgi8Mspz4C2_HTf3EgqKEnSKH6YOG0SYHbD61j-wws4bI5MblPdiAYv-waruTF3oZFaM7E/s200/ko+Tamil+Blockbuster+movie+in+2011+download.jpg)
5. கண்டேன்
சாந்தனு, சந்தானம் நடித்திருக்கும் கண்டேன் சென்ற வாரம் திரைக்கு வந்தது. முதல் இரு தினங்களில் இப்படம் 54 திரையிடல்களில் 4.7 லட்சங்களை வசூலித்துள்ளது. மிகக்குறைவான வசூல்.
4. அழகர்சாமியின் குதிரை
விமர்சனம் அளவுக்கு அழகர்சாமியின் குதிரைக்கு கலெக்சன் இல்லை. சென்ற வார இறுதியில் இப்படம் 7.4 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் மொத்த சென்னை வசூல் 37 லட்சங்கள்.
3. வானம்
சிம்புவின் வானம் சென்ற வார இறுதி மூன்று நாட்களில் 14.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை சென்னையில் இப்படம் வசூலித்ததுள்ளது 3.34 கோடிகள்.
2. எங்கேயும் காதல்
எவருக்கும் பிடிக்காத இந்தப் படம் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பது ஆச்சரியம். இதன் சென்ற வார இறுதி வசூல் 29 லட்சங்கள். இதுவரை சென்னையில் 2.05 கோடி வசூலித்துள்ளது.
1. கோ
தொடர்ந்து முதலிடத்தில் கோ. கமர்ஷியலில் கொஞ்சம் சோஷியல் களிம்பு தடவினால் கல்லா கட்டலாம் என்பதற்கு கோ சான்று. இதன் சென்ற வார இறுதி வசூல் 44.6 லட்சங்கள். இதுவரை சென்னையில் இப்படம் 5.49 கோடிகள் வசூலித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.