சினிமாவில் மட்டும் சந்தர்ப்ப மேகங்கள் எப்போது கூடும் எப்போது கலையும் என்று சொல்ல முடியாது.
சிறுத்தைக்குப் பிறகு சுராஜ் இயக்கும் படத்தில் கார்த்தி நடிப்பதாக இருந்தது. இடையில் சில பிரச்சனைகள். சுராஜின் மாப்பிள்ளையும் பாக்ஸ் ஆஃபிஸில் மண்ணைக் கவ்வியது. கார்த்தியும் புதியவர் ஷங்கர் தயாள் இயக்கத்தில் சகுனியில் நடிக்கப் போய்விட்டார். கார்த்தி, சுராஜ் கூட்டணி டமார் என்றே பலரும் நம்பினர்.
ஆனால் அந்த அவநம்பிக்கையில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கிறது. சகுனி முடிந்ததும் கார்த்தி சுராஜ் இயக்கத்தில் நடிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
விரைவில் அறிவிப்பு வெளிவரவிருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.