பசிக்காக சாப்பிட்டது போய் ருசிக்காக ஏங்கத் தொடங்கியிருக்கிறார் மாமி.ஃபீல்டில் நுழையும் போது காணுகிற அனைத்தையும் வாங்கிக் குவிக்கிற ஆவலில் எந்தப் படத்திலும் நடித்து கஜானாவை நிரப்புவது நட்சத்திரங்களின் வழக்கம். கஜானா நிரம்பிய பிறகு பேரும், புகழும் வேண்டும்... அதற்கு ஒன்றிரண்டு தேசிய விருதுகள் இருந்தால் நல்லது என்ற ஞானோதயம் பிறக்கும். அப்புறம் தொடங்கும் ருசி வேட்டை.
மாமியும் அப்படிதான். கஜானா நிரம்பிவிட்டது. இனி விருது வேட்டை. மரத்தை சுத்தி டூயட் பாடுனது அலுத்துப் போச்சு... யாரும் வித்தியாசமான கேரக்டர் தரலை என்று அலுத்துக் கொள்கிறார். இனி வித்தியாசமான வேடத்தில் மட்டுமே நடிப்பாராம். சந்தடி சாக்கில் இங்குள்ளவங்களுக்கு கதையே பண்ணத் தெரியலை என்று பொருமுவதுதான் வேடிக்கை.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.